மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!!

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!!

மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்த நாளில் சீன இறக்குமதிக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

வட அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகப்படியான போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ட்ரம்ப் சாடியிருந்தார்.

மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு புதிய வரிகள் விதிப்பதாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

ஆனால் அந்த நாட்டுத் தலைவர்கள் ஹலோ நாட்டின் எல்லை கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவித்த பிறகு அவர் வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கடுமையான வர்த்தகக் கொள்கையை செயல்படுத்துவது உலக அளவில் வர்த்தகப் போருக்கு வழி வகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.