சிங்கப்பூரில் mpox நோய்க்கான ஆயத்த நிலை குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குரங்கு காய்ச்சலுக்கான தயார்நிலை குறித்து சுகாதார அமைச்சகம் அடுத்த வாரம் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளது.
குரங்கு காய்ச்சலுக்கு எதிரான சிங்கப்பூரின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 13 குரங்கு காய்ச்சல் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகை நோய்க்கிருமிகள் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் clade II வகையைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
மேலும் மிக எளிதாக பரவக்கூடிய தொற்றுநோயான clade I திரிபு உலகளாவிய சுகாதார நிபுணர்களை விழிப்புடன் செயலாற்ற வைத்தது.
இந்த மாதம் 14 ஆம் தேதி, உலக சுகாதார நிறுவனம் mpox ஐ உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவித்தது.
சிங்கப்பூர் கடந்த வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 23) அன்று mpox ஆபத்து பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் விமானம் மற்றும் கடல் பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று அறிவித்தது.
மேலும் பயணிகளுக்கு உடல் தடிப்பு,காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் கூடுதல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் குரங்கு காய்ச்சல் தொற்று நிலவரத்தை சுகாதார அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Follow us on : click here