2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!!
2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும்,எந்தெந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் வரும் என்பதை பற்றியும் இப்பதிவில் காண்போம்.
சிங்கப்பூரில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் :
▫ PSA :
தற்போது PSA Driver மற்றும் Lashing வேலைகளுக்கு ட்ரைனிங் நடைபெற்று வருகிறது.இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதத்திற்குள் ஆட்களை தேர்ந்தெடுப்பர்.இந்த வேலைகளுக்கு இப்போது சேர முடியுமா என்று கேட்டால், முடியாது.
▫ S PASS,E PASS,NTS PERMIT இல் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் :
▪ Delivery Driver job ( இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் உங்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து நீங்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு அவர்களே சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கான வாய்ப்பையும் அளிக்கிறார்கள்)
▪ Cook
▪ Supplier
▪ Dish washer
இந்த நான்கு வேலைகளில் supplier வேலை வாய்ப்புக்கு மிக குறைவாக தான் வருகிறது. Cook ,Dish washer வேலைகளுக்கு அதிகளவில் இந்த இரண்டு மாதங்களில் வேலை வாய்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.பரோட்டா மாஸ்டர் ,கல்லு வேலை தெரிந்தவர்களுக்கு படிப்பு இல்லாவிட்டாலும் அனுபவம் இருந்தால் போதும் என்று ஒரு சில ஹோட்டல்கள் S PASS, E PASS, NTS பெர்மிட்டில் எடுக்கிறார்கள். Hotel management டிகிரி படித்ததோடு வேலையில் அனுபவம் உள்ளவர்களை ஒரு சில ஹோட்டல்கள் வேலைக்கு எடுக்கின்றனர்.
Supermarket,Minimart இல் வேலை வாய்ப்புகள் குறைவாகத்தான் வருகிறது.
▪ CNC Operator (cnc இல் programming,milling வேலை வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது)
▪ Warehouse Assistant ( இந்த வேலை வாய்ப்பு அதிகமாக வர வாய்ப்புள்ளது)
TEP PASS இல் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் :
▪ Carpender (இது அதிகமாக வர வாய்ப்புள்ளது.நீங்கள் நன்கு வேலை செய்தால் உங்களை நிரந்தரமாக்கி விடுவார்கள் என்று கூறுவார்கள்.ஆனால் நீங்கள் செல்லும்போது tep pass க்கான பணத்தை மட்டுமே கட்டுங்கள்)
▪ Cook (S PASS ,E PASS இல் கோட்டா கிடைக்காதபட்சத்தில் tep pass இல் எடுக்கிறார்கள்.
▪ Warehouse
▪ Cleaner
▪ Airport jobs
TEP PASS இல் சென்றால் மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல முடியாதா? என்ற கேள்வி பலரிடம் இருக்கும். நீங்கள் tep pass இல் சென்றால் மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல முடியும்.ஒரு சில வேலைகளுக்கு tep pass இல் சென்றவர்களை எடுப்பதில்லை.அதற்கு முக்கியமான காரணம் இதற்குமுன் tep pass இல் சென்றவர்களில் சிலர் போலியான டாக்குமெண்ட்களை சமர்ப்பித்து சென்றதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அப்ளை செய்தால் ரிஜெக்ட் ஆகிறது.இப்போதும் tep pass இல் சென்றவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
Shipyard ,PCM இல் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் :
▪ General worker
▪ Welder
▪ Pipe fitter
▪ Pipe installation
▪ Scaffolding
இந்த ஐந்து வேலை வாய்ப்புகளும் அதிகளவில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.இந்த வேலை வாய்ப்புகளுக்கு freshers அப்ளை செய்யலாம்.அவர்களுக்கு வேலை பற்றிய அனுபவம் இல்லாவிட்டாலும் ட்ரைனிங் கொடுக்கப்படும்.சென்னையில் ட்ரைனிங் நடைபெறும் .
▪ Nursing job ( இந்த வேலை வாய்ப்பு அதிகமாக வர வாய்ப்புள்ளது)
▫ Housemaid வேலை வாய்ப்பு எப்போதும் வரும்.
▫ டெஸ்ட் அடித்து முடித்தவர்களுக்கான work பெர்மிட்டில் வேலை வாய்ப்பு எப்போதும் வரும்.
இந்த இரண்டு மாதங்களில் Admin,Supermarket,Minimart ஆகிய வேலை வாய்ப்புகள் அதிகளவில் வருவதற்கான வாய்ப்பில்லை.
இதில் குறிப்பிட்டுள்ள வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளும் நமது www.sgtamilan.com இணையப்பக்கத்தில் தினந்தோறும் பதிவிடுகிறோம்.உங்களுக்கான வேலை வாய்ப்பை தேர்ந்தெடுத்து உங்கள் நினைவாக்குங்கள்.எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு : மேலுள்ள தகவல்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக பெறப்பட்டவை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan