வரலாறு காணாத மழை….. வெள்ள காடாக மாறிய நகரம்…..

ஹாங்காங் நகரத்தில் செப்டம்பர் 7 இரவு 11.00 மணி முதல் நள்ளிரவு வரை பெய்த தொடர் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் தெருக்கள் ஆறுகளாக மாறின. வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது என்றும், இரவு 11 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழையின் அளவு 158.1 மில்லி மீட்டர் பதிவானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Guangdong கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தீவிர நிலைமை இன்று (Sep.8) நண்பகல் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஒருவேளை வெள்ளம் சூழ்ந்தால் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

ஹாங்காங் தலைமை நிர்வாகி John Lee அவர்கள், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும், அனைத்து துறைகளையும் முழு முயற்சியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.