சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அதன் பழைய கட்டடங்களை மீண்டும் புதுப்பித்து திறக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இரண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தது.
கரியமில வாயுவை வெளியேற்றாத கட்டடங்கள் மட்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்தக் கூடாது என்று துணைப் பிரதமர் Heng Swee Keat கூறினார். பழைய கட்டடங்களை இன்னும் சிறப்பானவையாக்க முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.
சிங்கப்பூரில் இருக்கும் நகரங்களில் கட்டடங்கள் அருகருகே இருக்கும் பழைய கட்டடங்களை மேம்படுத்துவதன் காரணமாக நகரங்களில் பருவநிலை இலக்குகளை எட்ட உதவும் என்றார்.
பசுமையான வளாகத்தைப் பல்கலைக்கழகம் கொண்டிருக்க வேண்டும்.இது பல்கலைக்கழகத்தின் விரிவான திட்டத்தில் ஓர் அங்கமாகும். வடிவமைப்பு, சுற்றுப்புறத் துறையின் கட்டடங்கள் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மிகப் பழையமான கட்டடங்களில் இவையும் அடங்கும்.
பழைய கட்டடங்களைத் தகர்க்காமல் பல்கலைக்கழகம் புத்துயிர் கொடுத்துள்ளது. புதிய கட்டடங்களுக்காக அவற்றைத் தகர்க்காமல் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்க இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.