ஒற்றுமையே பலம்… குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட சிங்கப்பூரர்கள்…

ஒற்றுமையே பலம்... குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட சிங்கப்பூரர்கள்...

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளன.

பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தங்களுடைய குடும்பங்கள் வலிமையானதாகவும், நெகிழ்ச்சியுடனும் இருப்பதாக நம்புகிறார்கள்.

மேலும் பலர் தங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்வது தங்கள் கடமை என்று நினைக்கிறார்கள் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 15 வயதுக்கு மேற்பட்ட 2,000 பேரிடம் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

குடும்ப பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்? குடும்பத்தின் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சினைகள் எவ்வாறு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன? குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பழகுவது மற்றும் குறைகளைத் தீர்ப்பது எப்படி?போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 86 சதவீதம் பேர் நாம் எந்தவித சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருந்தால் நல்லது என்று கூறினர்.

மேலும் நாம் குடும்பமாக எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்.