நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!!

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!!

நைஜீரியாவில் இருந்து வாஷிங்டனுக்கு சென்று கொண்டிருந்த united airlines விமானம் நடுவானில் தடுமாறியதாக கருதப்படுகிறது.

இதனால் 38 பேர் காயமடைந்துள்ளதாக நைஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இச்சம்பவம் நடந்தது என்று விமான நிறுவனம் கூறியது.

நைஜீரியா விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.

காயமடைந்தவர்களில் 6 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் மத்திய விமான நிலையங்கள் ஆணையம் X தளத்தில் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 32 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.

அந்த விமானத்தில் மொத்தம் 256 பேர்இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நைஜீரியா அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் NBC News ஊடகம் கூறியது.

அதற்கு United Airlines ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan