அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் டின் மறு விநியோக கட்டணம் எந்த சூழ்நிலையில் தள்ளுபடி செய்யப்படும் என உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு கா.சண்முகம் பதிலளித்துள்ளார்.
அவற்றுக்கு திரும்ப வழங்குவதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது குறித்து தேவையான சூழலில் பரிசீலிக்கப்படும்.
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் இதனை பரிசீலித்து முடிவெடுக்கும்.
எந்த சூழ்நிலையில் அவை காணாமல் போனது? எந்த சூழ்நிலையில் அவை சேதம் அடைந்தது?அந்த சூழ்நிலையில் உரிமையாளரிடம் இருந்ததா? என்பதை ஆணையம் ஆராயும் என்றார்.
இவ்வாறு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
2020 முதல் 2022 -ஆம் ஆண்டுகள் வரை கிட்டத்தட்ட 12,200 மறு விநியோக கட்டணத்தை ஆணையம் தள்ளுபடி செய்தது.
அதே ஆண்டுகளில் 410 பாஸ்போர்ட்களைத் திரும்ப வழங்குவதற்கான கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.