ஆசியாவை புரட்டி போட்ட யாகி சூறாவளி!!
ஆசியாவை இந்த வருடம் புரட்டிப் போட்டிருக்கும் மிகப்பெரிய சூறாவளி யாகி என்ற பெயரில் கூறப்படுகிறது. வியட்நாமில் யாகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது, அவற்றை துப்புரவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 226க்கு மேல் அதிகரித்துள்ளது. குறைந்தது 100 பேரில் நிலைமை என்னவென்றும் சரியாக தெரியவில்லை என்பதும் கவலைக்கிடங்காக உள்ளது.
வடக்கு வியட்நாமில் வெள்ளம் குறைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தலைநகர் ஹனோயின் ஒரு சில பகுதிகளில் வெள்ளம் இன்றளவிலும் திரண்டு இருப்பதாக வானிலை ஆய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளும், வர்த்தகம் நிலையங்களும் வெள்ளத்தால் அதிகளவில் சேதமடைந்துள்ளன.
செப்டம்பர் 7 சனிக்கிழமை தொடங்கிய இந்த அதிவேக சூறாவளி மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.
பின்னர் சூறாவளி வலுவிழந்த நிலையில் அதிகமான இடங்களில் கடும் மழையும் பொழிந்துள்ளது.
இதன் விளைவாக ஆறுகளின் நீர்மாட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கையாக கரையோரா இடங்களில் இருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டனர்.
Follow us on : click here