ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை...!!!விமானச் சேவை ரத்து...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய்க்கும் இடையிலான 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷாங்ஹாய் நகரம் பேபின்கா சூறாவளியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
புயல் சீனாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது.
அங்கு மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.
இதனால் நகரின் 2 முக்கிய விமான நிலையங்கள் உட்பட அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளன.
இந்த சூறாவளி இன்று (செப்டம்பர் 16) ஷாங்ஹாயில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
70 ஆண்டுகளில் தாக்கிய மிக வலிமையான புயல் பேபின்கா என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஷாங்ஹாய் இடையே சேவை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஷாங்ஹாய் நகரின் நிலைமையைப் பொறுத்து கூடுதல் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சூறாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் சில ரயில் சேவைகள் மற்றும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here