பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!!

பிலிப்பீன்ஸில் உள்ள வட கிழக்கு பகுதியில் Man-yi சூறாவளி எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ளது.

கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்து நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்தது.மேலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.வாரயிறுதி அன்று லூசோன் தீவை சக்திவாய்ந்த புயல் தாக்கியது.

பிலிப்பீன்ஸில் புயல்கள் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் புயல்கள் சேதப்படுத்தியவைகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.

சாலைகள் மற்றும் நீர்வழிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் இடிபாடுகள் நெருக்கடிக்கால ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.

மின் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.இதனால் மாதக்கணக்கில் மின்தடை தொடரும் என கூறப்படுகிறது.