கடன் தொல்லையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது..!!!!

கடன் தொல்லையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது..!!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடன் கொடுத்தவர் தொல்லையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஒருவருக்கு வயது 35 என்றும் மற்றொருவருக்கு வயது 44 என்றும் தெரிய வந்துள்ளது.

டிசம்பர் 3ம் தேதி இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அங் மோ கியோ அவென்யூ 3 இல் உள்ள வீடொன்றின் நுழைவுக் கதவை சைக்கிள் பூட்டினால் பூட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர்கள் வீட்டிற்கு வெளியே எச்சரிக்கைக் குறிப்பையும் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடனும், காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு டிசம்பர் 5 ஆம் தேதி கைது செய்தனர்.

44 வயதுடைய நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதான இருவரும் வேறு கடன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

35 வயதுடைய நபர் மீது இன்று (டிசம்பர் 7) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

கடன் தொல்லையில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 6 கசையடிகள் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here ⬇️