இந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 34 வயதுடைய நபரிடம் இருந்து 31 அழைப்புகள் சிங்கப்பூர் காவல்துறைக்கும், குடிமை தற்காப்பு படைக்கும் வந்துள்ளன.
அவர் சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் தற்கொலை முயற்சிகள், கடன் தொல்லைகள், தீ விபத்துகள் மற்றும் பாலியல் சம்பவங்கள் குறித்து புகார் அளித்திருந்தார். ஆனால், அப்படியொரு சம்பவங்கள் நடைபெறவில்லை. அதனை காவல்துறையும், குடிமை தற்காப்பு படையும் பின்னர் உறுதி செய்தன.
அந்த நபர் தனது அடையாளத்தை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மற்றுமொரு சம்பவம், கடந்த மாதம் 26-ஆம் தேதி அன்று 27 வயதுடைய பெண் தனது வீட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சி குறித்து இரண்டு முறை புகார் அளித்திருந்தார்.
பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 13-இல் உள்ள கழக பிளாக்கில் நிகழ்ந்ததாக கூறினார்.
ஆனால், அப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்தன.
அவர்கள் இருவரும் சிங்கப்பூர் காவல்துறைக்கும், குடிமை தற்காப்பு படைக்கும் போலியான அழைப்புகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட உள்ளது.நீதிமன்றத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி (இன்று) இருவர் மீதும் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.