துடிக்க ….துடிக்க… மலைப்பாம்பை உயிருடன் எரித்த இருவர்…!!!

துடிக்க ....துடிக்க... மலைப்பாம்பை உயிருடன் எரித்த இருவர்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நவம்பர் 20 அன்று ‘ரெட்டிக்கியூலேட்டட் பைத்தன்’ என்ற ஒரு வகை மலைப்பாம்பு உயிருடன் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேசிய பூங்காக் கழகம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏக்கர்ஸ் என்ற விலங்கு நல ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தால் நவம்பர் 26 அன்று இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் இருவர் தீ பற்றக்கூடிய கூடிய பொருட்களை பயன்படுத்தி மலைப்பாம்பை எரிப்பதைக் காட்டியது.

துடித்த அப்பாம்பை அவர்களில் ஒருவர் மிதித்தது தெரிந்தது.

பின்னர் அந்த மலைப்பாம்பு ஒரு கொள்கலனில் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

ஏக்கர்ஸ் இந்தச் செயலை தான் சந்தித்த மிக மோசமான விலங்குவதைச் சம்பவங்களில் ஒன்றாக கருதியது.

வனவிலங்கு சட்டத்தின் கீழ்,தேசிய பூங்காக் கழக இயக்குநரின் அனுமதியின்றி வனவிலங்குகளைப் பிடிப்பது அல்லது கொல்வது குற்றமாகும்.

விலங்குவதைச் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.