சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி...!!!
பின்லாந்தில் சிங்கப்பூர் சுற்றுலா பேருந்தானது சீன சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
ரோவனியேமி நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
இங்கு புகழ்பெற்ற சாண்டா கிளாஸ் கிராமம் உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு
வருகை புரிவார்கள்.
உள்ளூர் சுற்றுலா நிறுவனமான Zeng Brothersக்கு சொந்தமான சுற்றுலா பேருந்தில் மொத்தம் 29 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக சாலையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீன பேருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் 6 பயணிகள் இருந்தனர்.
அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Follow us on : click here