செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!!

செம்பவாங்கில் குடியிருப்பு வீடுகள் வர உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய இடத்தைத் தேட நிறுவனங்கள் போராடி வருகின்றனர்.
இரண்டு விடுதிகள் ஏப்ரலில் மூடப்பட வேண்டும்.
குடியிருப்பு கட்டடப் பணிகள் மேற்கொள்வதற்கு இரண்டு தங்கும் விடுதிகளை இடிக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவலை தங்கும் விடுதிகள் நடத்தும் வோபிஸ் என்டர்ப்ரைஸ் கூறியது.
காலக்கெடு நெருங்கி வருவதால் முதலாளிகள் ஊழியர்களுக்கு மாற்று இடத்தை தேடுவதில் போராடி வருகிறார்கள்.
ஊழியர்களுக்கான மாற்று இட ஏற்பாட்டால் பாதிக்கப்பட்ட முதலாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக மனிதவள அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
உதவி தேவைப்படுபவர்களுக்கு சிங்கப்பூர் தங்கும் விடுதிகள் சங்கத்தை பரிந்துரைப்பதாக கூறினார்.
சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர் நியமனச் சட்டத்தின்கீழ்(EFMA), முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தங்குமிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனை மீறும் முதலாளிகள் அமலாக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று பேச்சாளர் எச்சரித்தார்.
Follow us on : click here