கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே கடன் கொடுத்தவர்கள் தொல்லையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

அதன் தொடர்பில் 26 வயது ஆணும் 23 வயது பெண்ணும் கடன் கொடுத்தவரிடம் மிரட்டி பணம் பறித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 4ஆம் தேதி பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் உள்ள இரண்டு வீடுகளில் சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையின் மூலம் இரண்டு சந்தேக நபர்களின் அடையாளத்தை போலீசார் உறுதி செய்தனர்.

இருவரும் நேற்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிங்கப்பூரின் பிற பகுதிகளில் கடன் வழங்கல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.

முதல் முறையாக கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 5,000 முதல் 50,000 வெள்ளி வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6 கசையடிகளும் விதிக்கப்படும்.