நேற்று பிப்ரவரி,6-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை துருக்கி,சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிழநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 3,700 க்கும் அதிகமான உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்க ரிக்டர் அளவு 7.8. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
கட்டிட இடுபாடுகளின் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியில் காயமடைந்தோர் எண்ணிக்கை 13,000 க்கும் அதிகமானோர். அதேபோல் சிரியாவில் 3,500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மூன்று மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8,7.5 மற்றும் 6.0.
முதல் நிலநடுக்கமான 7.8 அளவுக்கு பிறகு, மற்ற இரண்டு நிலநடுக்கமும் சில நேரங்களுக்கு பிறகு ஏற்பட்டது.7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சிரியா எல்லையிலிருந்து 90 கி.மீ நகருக்கு வடக்கே பூகம்பம் ஏற்பட்டது.
உலக அளவில் இது மிகப்பெரிய நிலநடுக்கம் என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.