ஜப்பானில் சுனாமி அலையா?
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 203 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 52 பேர் பற்றிய எந்த தகவலும் இதுவரை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல சேதமடைந்தன.
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஒரு ஆஃப்லைன் அணுமின் நிலையத்தில் மூன்று மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த அணுமின் நிலையத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஜப்பான் கடலில் உள்ள மற்ற அணுமின் நிலையங்களில் சிறிதளவு சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழலுக்கும், அணுமின் நிலையங்களுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.