சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க…..

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க.....

கோடை காலம் தொடங்கிய நிலையில் நாம் அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

பழங்களில் விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளது.

பழங்களை சாப்பிடுவது போன்று சருமத்தில் மேற்பூச்சாக பயன்படுத்துவது அதிக அளவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

சரும பராமரிப்பில் பழங்கள் சேர்க்கும் போது இந்த திராட்சை பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

திராட்சை பழத்தை பயன்படுத்துவதால் சருமம் வயதானது போன்ற தோற்றத்தை தடுக்கிறது.

புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

இந்த திராட்சை பழத்தை ஃபேஸ் பேக், டோனர் என்று பல வகைகளில் பயன்படுத்தலாம்.

திராட்சைப்பழம் பச்சை கருப்பு அல்லது பன்னீர் திராட்சையாக இருந்தாலும் அதை சரும பராமரிப்பில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திராட்சைப் பழத்தின் சார்பில் பயனுள்ள நன்மைகளில் ஒன்று. வெயிலால் ஏற்படும் சன்பர்ன் பிரச்சனைக்கு
இது ஒரு சிறந்த தீர்வு ஆகும்.

திராட்சைப் பழத்தில் இருக்கும் விட்டமின் ஏ கொலாஜன் உருவுவாதை தூண்டுகிறது.

கொலாஜன் உருவாவதால் சருமம் சுருக்கம் இல்லாமல் மென்மையாக இருக்கும்.

திராட்சைப் பழத்தில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ அதிக அளவு இருப்பதால் முகத்தில் இருக்கும் வடுக்களை சரி செய்கிறது.

இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அசுத்தங்களை சரி செய்கிறது.

ஆயில் ஸ்கின் இருப்பவர்கள் திராட்சை பழத்தில் பேஸ் பேக்:

தேவையான பொருட்கள்;

திராட்சை-6-7,
ரோஸ் வாட்டர்-1 டீஸ்பூன் முல்தானி மிட்டி- தேவைக்கு ஏற்ப

செய்முறை: திராட்சையை மசித்து ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மிட்டி ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.

பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

நன்மைகள்.

நம் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை சரி செய்து,சோர்வு நீக்க செய்கிறது.