டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!!

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு...!!!

காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கு பிரபலமானவை.

அங்கு வசிக்கும் பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக கைவினைப்பொருளைச் செய்து வருகின்றன.

கைவினைப் பொருட்கள் தான் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

காஷ்மீரில் மிகவும் பிரபலமான கைவினைப் பொருளாக பஷ்மினா கருதப்படுகிறது.

இனிமேல் இதன் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்குக் காரணம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 26% வரி உயர்வே காரணமாகும்.

வரிகள் அமலுக்கு வரும்போது கைவினை கலைஞர்களை இந்த வரி உயர்வு அதிகமாக பாதிப்படைய செய்யும்.

கைவினைப் பொருட்களின் விற்பனை மூலம் இந்தியா ஆண்டுதோறும் 465 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டுகிறது.

இந்த வரி உயர்வால் பலர் கைவினைத் தொழிலை விட்டு வெளியேறக் கூட வாய்ப்புள்ளது.

இது கைவினை கலைஞர்களை அதிகமாக பாதிப்படைய செய்யும்.

இதைக் கருத்தில் கொண்டு, கைவினைப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்க இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது சாத்தியமில்லை என்றால், அரசாங்கம் கைவினை கலைஞர்களுக்கு உதவ மானியங்களை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.