டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
உலகளவில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான(USAID) ஊழியர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும், கிட்டத்தட்ட 2000 பேரை பணிநீக்கம் செய்வதாகவும் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு USAID தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயிலில் “Reduction in force” என்று குறிப்பிட்டு சுமார் 2000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் முதலில் ஆயிரகணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முயற்சி செய்தார். ஆனால் அதை செயல்படுத்துவதில் சட்ட சிக்கலை எதிர்கொண்டார்.
டிரம்ப் நிர்வாகம் USAID ஐ ஒழிப்பதை ஒரு கூட்டாச்சி நீதிபதி தடை செய்திருந்தார்.ஆனால் இந்த இடைநிறுத்தம் நிரந்தரமாக இருக்காது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தார்.
” பிப்ரவரி 23,2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி,பணி-முக்கியமான செயல்பாடுகள், முக்கிய தலைமைத்துவம் அல்லது சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணி செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்களைத் தவிர அனைத்து USAID நேரடி பணியமர்த்தல் பணியாளர்களும் உலகளவில் நிர்வாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள்” என்று USAID ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் குறிப்பிடப்பட்டுள்ளதாக AP தெரிவித்தது.
எனினும், முக்கியமான பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஊழியர்கள் இந்த முடிவால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. ஆனால் எத்தனை ஊழியர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan