டிக் டாக் செயலி தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த டிரம்ப்…!!!

டிக் டாக் செயலி தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த டிரம்ப்...!!!

அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.டோனல்ட் டிரம்ப் TikTok செயலியை தடை செய்யும் சட்டம் அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதவியேற்ற பிறகு அரசியல் ரீதியாக தீர்வு காண கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.

TikTok செயலியின் உரிமையாளரான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதிக்குள் அதை விற்க வேண்டும் இல்லையெனில் அந்தச் செயலி தடை செய்யப்படும் என்றார்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அவசர கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அக்கறைக் காரணமாக அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் இந்த உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தனர்.

அமெரிக்காவில் TikTok மீதான தடை அமலுக்கு வருவதற்கு 9 நாள் முன்னதாக, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த மாதம் (ஜனவரி 2025) 10ஆம் தேதி விசாரிக்க உள்ளது.