சிங்கப்பூரில் லாரிகள் மற்றும் கார் மோதி விபத்து ஏற்ப்பட்டது!!

சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையில் இரண்டு லாரிகள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் மார்ச் 10ஆம் தேதி அன்று பிற்பகல் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பிற்பகல் 3.50 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறினர்.
மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி மீது கார் மோதியது.
பிறகு நின்று கொண்டிருந்த அந்த கார் மீது டிப்பர் லாரி மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் இருந்த, டிரைவர் உட்பட 3 பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தேசிய பூங்கா வாரியத்திற்கு சொந்தமான அந்த மரம் வெட்டும் லாரியில் இருந்த ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.