மூடுபனியால் கவிழ்ந்த லாரி!! காயமடைந்தவர்களுக்கு உதவாமல் கோழிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் டிசம்பர் 27ஆம் தேதி அன்று ஆக்ரா-டெல்லி நெடுஞ்சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, விபத்துக்குள்ளான லாரியிலிருந்து கோழிகளை திருடுவதற்கு மக்கள் விரைந்தனர்.

கோழிகள் திருடப்படுவதை லாரி ஓட்டுனரால் தடுக்க முடியவில்லை.அதனால் அவருக்கு ₹2,50,000 இழப்பு ஏற்பட்டதாக கூறினார்.

இணையவாசிகள் பலர் இந்த வெட்கக்கேடான செயல்களை கண்டித்தும், கேலி செய்தும் வருகின்றனர்.