
மார்ச் 7-ஆம் தேதி (நேற்று) தாம்சன் -ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஏற்பட்ட ரயில் கோளாற்றால் கூடுதலாக 25 நிமிடம் பயணம் செய்வதற்கு தேவைப்பட்டதாக SMRT நிறுவனம் தெரிவித்தது.
இது குறித்து மாலை 5 மணியளவில் செய்தி வெளியிட்டு இருந்தது.மாற்று ரயில் பாதைகளைப் பயணிகள் பயன்படுத்துமாறு அறிவித்தது.
கேல்டிகாட் நிலையத்திற்கும் ஆர்ச்சர்ட் நிலையத்திற்கும் இடையே இடைவெளி பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
இலவச பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்ட அனைத்து நிலையத்திற்கும் வழங்கப்படும் என்றும் கூறியது.
மாலை 6:30 மணி அளவில் கரையோர பூந்தோட்டத்தை நோக்கிச் செல்லும் ரயில்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது என்று நிறுவனம் கூறியது.
ஆர்ச்சர்ட் நிலையத்திலிருந்து உட்லண்ட்ஸ் நோக்கி செல்லும் பாதையில் மாலை சுமார் 4.45 மணியளவில் ரயில் கோளாறு ஏற்பட்டதாக கூறியது.
விசாரணைக்காக பழுது அடைந்த ரயிலை மீட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
மாலை நேர பயணத்தில் இடையூறு ஏற்பட்டதால் SMRT நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.