சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2023-ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 25 ஆக இருந்தது.
ஷாங்கி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து 5 முதல் 6 விமான சேவைகள் சீனாவிலிருந்து வந்து செல்கின்றது. நோய் பரவல் காலத்திற்கு முந்தைய எண்ணிக்கையில் 10 விழுக்காடுக்கும் குறைவு என்று போக்குவரத்து துறை அமைச்சர் S Iswaran கூறினார். ஷாங்கி நிலையம் கையாளும் மொத்த விமான சேவைகள் ஒன்றரை விழுக்காடு மட்டுமே.
சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு 700 முதல் 1000 பயணிகள் வருகின்றனர்.அவர்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள் அல்லது நீண்டகால வருகை அனுமதி பெற்றுவர்களாக இருக்கின்றனர்.
இதையெடுத்து சிங்கப்பூர், சீனா விமான நிறுவனங்கள் விமான சேவைகளை அதிகரிக்க விண்ணப்பித்துள்ளனர்.