Singapore news

சிங்கப்பூரில் பயிற்சி!

சிங்கப்பூரில் உள்ள Moulmein-Cairnhill வட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மூத்த குடிமக்களின் மனநலப் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய பயிற்சி பெற உள்ளனர். அதோடு அவர்கள் மனநலனை மேம்படுத்தும் முயற்சியிலும் குடியிருப்பு வாசிகளே ஈடுபடுகின்றனர்.

அந்த தொகுதியில் மனநலத்தை மேம்படுத்தும் முயற்சி ஓர் அங்கமாக இந்த பயிற்சி அமையும்.

இத்திட்டம் தொடங்கி மூவாண்டு காலத்தில் இதுவரை 50 பேர் இணைந்துள்ளனர்.

சக குடியிருப்பாளர்களுக்கு உதவ மேலும் 50 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இந்த பயிற்சியில் ஈடுபடுவோருக்கு மனநல ஆலோசகர்கள் பயிற்சி அளிப்பர்.

மனநலம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொண்டுழியர்கள் நடத்துவர்.

அத்தகைய முயற்சிகளை முதியோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ள திட்டமிடப்படுகிறது.

Moulmein-Cairnhill வட்டார பகுதிகளில் பத்தில் நான்கு பேர் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள்.