தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அக்டோபர் 30 ஆம் தேதி ரயில்கள் மற்றும் பேருந்துகள் கூடுதல் நேரம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கு பாதை மற்றும் டவுன்-டவுன் பாதை ரயில் சேவைகள் அரை மணி நேரம் நீட்டிக்கப்படும் என SBS Transit தெரிவித்துள்ளது.
வடக்கு-கிழக்கு பாதையில் பொங்கோலுக்கு செல்லும் கடைசி ரயில், ஹார்பர்ஃபிரன்ட் ஸ்டேஷனில் இருந்து பின்னிரவு 12.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்பர்ஃப்ரண்ட் செல்லும் கடைசி ரயில் பொங்கோல் நிலையத்தில் இருந்து பின்னிரவு 12.02 மணிக்கு புறப்படுகிறது.
டவுன்-டவுன் பாதை எக்ஸ்போவிற்குவிற்குச் செல்லும் கடைசி ரயில் புக்கிட் பஞ்சாங் நிலையத்திலிருந்து பின்னிரவு 12.03 மணிக்கு புறப்படுகிறது.
புக்கிட் பஞ்சாங்கிற்கான கடைசி ரயில் எக்ஸ்போ ஸ்டேஷனில் இருந்து மதியம் 12.04 மணிக்கு புறப்படுகிறது.
மேலும் 17 பேருந்து சேவைகள் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை – 60A, 63M, 114A, 222, 225G, 228, 229, 232, 238, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812
பேருந்து முனையங்களைப் பொறுத்து, கடைசி பேருந்து பின்னிரவு 12.55 முதல் 1.35 மணிக்குள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரியான சிறப்பு ரயில் சேவை மற்றும் பேருந்து கூடுதல் நேரம் இயக்கப்படுவதால் மக்கள் சிரமமின்றி ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க முடியும் மற்றும் எதிர்பாராத கூட்ட நெடுசலை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg