பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது.
மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது.
இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூறப்படுகிறது.
மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரி புது தில்லியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜான்சியில் அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) மாலை 5 மணியளவில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
பிறந்து சில நாட்களே ஆன சிசுக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையின் மற்றொரு புதிய வார்டில் பராமரிக்கப்பட்டு வந்தது.
உயிரிழந்த குழந்தைகளை அடையாளம் காண மரபணு சோதனை நடத்தப்படும் என்று மாநில அமைச்சர் கூறினார்.
உயிரிழந்த குழந்தைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL