கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்ற தம்பதியினர் உயிரிழந்த சோகம்…!!!

சிங்கப்பூர்:கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் தம்பதியினர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி விரைவுச் சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திரு.எட்மண்ட் ஆங்,வயது 72 மற்றும் அவரது மனைவி கேத்தரின் ஆங், வயது 70 ஆகியோர் உறவினர் ஒருவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட கோலாலம்பூருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் பயணித்த சொகுசு டாக்சியானது ரசாயனங்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதியதில் வயதான தம்பதியரும்,டாக்சி ஓட்டுநரும் உயிரிழந்தனர்.

ஆங்கின் குடும்பத்தினர் டிசம்பர் 28ஆம் தேதி இந்தத் தகவலை வெளியிட்டனர். தம்பதியினர் திருவாட்டி இங்கின் மருமகன் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட திட்டமிட்டு கோலாலம்பூர் சென்றனர்.

இந்நிலையில் மருமகன் திரு.ஆங்கின் கைபேசிக்கு அழைத்தபோது, ​​செர்டாங் காவல் நிலைய அதிகாரி ஒருவர், ஆங் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால், பின்னர் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.