சிங்கப்பூரில் இந்தியா ஊழியருக்கு நேர்ந்த சோகம்……

சிங்கப்பூரில் உள்ள பாசிர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1-இல் ஞாயிற்றுகிழமை மதியம் 2.15 மணியளவில் ஓர் விபத்து நிகழ்ந்தது.

அந்த விபத்தில் கட்டிட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.

இந்திய ஊழியர் கேபிள் இழுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுகிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் வந்ததாக CNA- விடம் கூறியது.

சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை விரைந்தன. கட்டட ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு வயது 31.

கேபிள் இழுக்கும் பணியில் இந்திய ஊழியர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கேபிள் டிரம்மை தாங்கி கொண்டிருந்த Steel Stand விலகியது.அதனால் இரும்பு கம்பி அவரை தாக்கியது. அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை சாங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவர் உயிர் பிரிந்தது.

வேலையிடத்தில் நடைபெற்று வந்த அனைத்து கேபிள் பதிக்கும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு விடப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 14 வேலையிட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக mom கூறியது.