Singapore News in Tamil

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் பழைய லெகிடி இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சமூகப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

அதில் குழி தோண்டும் பணியும் ஒன்று. அந்த ஊரில் யாராவது உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்ய ஏதுவாக குழி தோண்டி தயாராக வைப்பது வழக்கம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் குழி தோண்டும் பணியில் ஊரைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர்.

அவர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர் எம் எம் நிசாத் என்பவரும் இணைந்து பணியாற்றினார். இவர் அபுதாபியில் பணியாற்றி வந்துள்ளார்.

விடுமுறையால் அவர் ஊருக்கு வந்துள்ளார். அவர் ஊருக்கு வந்த பிறகு இளைஞர்களின் பணிகளையும் செயல்களையும் ஊக்குவிப்பார்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் சமூக சேவை பணி முடிந்த பிறகு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.

அவர் தோன்றிய குழியிலையே அவருடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இத்துயர சம்பவத்தால் அந்த ஊரும் அதன் சுற்றுப் பகுதி மக்களும் துயரத்தில் ஆழ்ந்தனர்.