‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!!

'புஷ்பா 2' படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!!

இந்தியாவின் ஹைதராபாத் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா 2’ நடிகர் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம்
(40,000 வெள்ளி) வழங்கப்படுவதாக அறிவித்தார்.

சந்தியா திரையரங்கில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) இச்சம்பவம் நடந்தது.

அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு செல்ல இருந்ததால் தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதியின் 8 வயது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இறந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மருத்துவச் செலவை நாங்கள் கவனித்துக் கொள்வோம்.

இந்த இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது.நாங்கள் உங்களுடன் உள்ளோம். தேவைப்பட்டால் ஆதரவு தருவதாகக் கூறினார்.

அல்லு அர்ஜுனின் இந்த நற்செயலை கண்டு இணையவாசிகள் பலரும்
பாராட்டி வருகின்றனர்.