சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூர்: SJI இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போது உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவருக்கு வயது 15 என்று தெரியவந்துள்ளது.

SJI இன்டர்நேஷனல் ஸ்கூல் இந்த தகவலை நேற்று (நவம்பர் 8)அறிவித்தது.

கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வுத் திட்டத்துக்காக மாணவர் மாலத்தீவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மாணவர்கள் கடலுக்குள் ஸ்நோர்கெல் எனும் குழாய் மூலம் சுவாசிக்கும் கருவியைப் பயன்படுத்தி கடலில் நீந்தியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

படகு ஒன்று மாணவன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மாலத்தீவு தலைநகர் மாலியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திகுரா தீவில் நடந்துள்ளது.

பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஜான்ஸ்டன், வெளிநாட்டுப் பள்ளிப் பயணத்தில் தனது மாணவர் இறந்ததற்காக வருத்தம் தெரிவித்தார்.

மேலும், மாணவரின் குடும்பத்திற்கு பள்ளி தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.