சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!
ஜப்பானில் பாலாடை உருண்டை தொண்டையில் சிக்கியதால் 1 வயது பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஜப்பான் அதிகாரிகள் நேற்று (டிசம்பர் 20) இந்தச் செய்தியை பகிர்ந்தனர்.
இதுபோன்று மேலும் 3 சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை சிறுவன் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் நடந்தது.
சிறுவன் இரவு உணவின் போது சுமார் 2 சென்டிமீட்டர் அகலமுள்ள உருண்டையை விழுங்கியதாக கூறப்பட்டது.
அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
ஆனால் அதை வெளியே எடுக்க முடியாததால்
12 நாட்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தான்.
மருத்துவர்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் பொழுது எளிதில் விழுங்கக் கூடிய வகையில் உணவுகளை வழங்க அறிவுறுத்துகின்றனர்.
Follow us on : click here