வேகவிதி மீறலுடன் விபத்து ஏற்படுத்திய போக்குவரத்து அதிகாரிக்குச் சிறை..!!!

வேகவிதி மீறலுடன் விபத்து ஏற்படுத்திய போக்குவரத்து அதிகாரிக்குச் சிறை..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதசாரி ஒருவரின் மரணத்திற்கு காரணமான போக்குவரத்து காவல்துறை அதிகாரி முகமது ஃபிர்டாவுஸ் யூசோப் என்பவருக்கு 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு வாகன உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் ஜூன் 21, 2023 அன்று நடந்தது.

அவர் புவாங்கோக் டிரைவ், ஹவ்காங் அவன்யூ 6 என்ற இடத்தில் விபத்து நடந்த இடத்திற்கு பார்வையிடச் சென்று கொண்டிருந்தார்.

ஹவ்காங் அவன்யூ 3 இல் கிம் சுவான் சாலை சந்திப்பை நெருங்கியபோது, ​சாலையைக் கடந்து கொண்டிருந்த 58 வயது ஆடவர் மீது மோதியதில் பாதசாரி தூக்கி வீசப்பட்டார்.

அந்த நபர் அதிக காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாலையில் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் மணிக்கு 50 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சென்றதால் விபத்து ஏற்பட்டது.

அவர் வேகக்கட்டுப்பாட்டை மீறி இரு மடங்கு அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவசர பணிகளில் கூட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றங்களுக்காக அவருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

Follow us on : click here ⬇️