பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!!

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள பாலஸ்டியர் சாலையில் லாரியிலிருந்து ஒரு பெரிய கொள்கலன் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

31 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

பாலஸ்டியர் சாலை மற்றும் கிம் கியாட் சாலை சந்திப்பில் உதவி கோரி இன்று காலை 9.05 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

காலை 9.30 மணியளவில், பெகு சாலைக்குச் செல்லும் மூன்று பாதைகளில் ஒன்று மட்டும் திறந்திருந்தது.மற்ற இரண்டு பாதைகள் மூடப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்கிறது.