சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!
சீனப் புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் இருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கூட்ட நெரிசலை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறை நாட்களில் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளை 24 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறை நாட்களுடன் ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கை சுமார் 20 விழுக்காடு அதிகம்.
கடந்த மாதம் (டிசம்பர் 2024) 13,20 ஆகிய தேதிகளில் 562000, 553000 க்கும் மேற்பட்ட முறை மக்கள் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg