அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!!

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!!

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சீனாவைச் சேர்ந்த Huang Qiulin எனும் சுற்றுலா பயணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் புகை பிடித்தார்.

ஆர்ச்சர்ட் ரோட்டில் பெரும்பாலான பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை உள்ளது.

ஹுவாங் கடைத்தொகுதிக்கு வெளியே புகை பிடிப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.அவரை அணுகினர் .

அப்போது அவர் அதிகாரிகளில் ஒருவருக்கு 50 வெள்ளி லஞ்சம் வழங்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு கூறுகிறது.

அவர் கொடுக்க முற்பட்ட லஞ்சத்தை அதிகாரி மறுத்துவிட்டார்.

இப்போது அந்த சுற்றுலா பயணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது 100000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.