கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!!
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது போதாது என்று பயண நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் புதிய அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் சுற்றுலாத்துறை 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஆனால் கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையை இன்னும் தொடவில்லை.
சில உள்ளூர் நிறுவனங்கள் பயணத்துறையில் உள்ள அனைவரும் சமமாக மீண்டு வருவது போல் தெரியவில்லை என்று கூறியுள்ளன.
10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளதாக Monster Day Tours நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் என்றார்.
கிருமி பரவல் காலகட்டத்தில் சைனாடவுன் மரபுடைமை நிலையம் மூடப்பட்டது.இந்த மாதம் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.
சிங்கப்பூர் சுற்றுலாத்துறை கழகத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக நிறுவனங்கள் கருதுகின்றன.
மேலும் சுற்றுலாத் துறையில் உள்ளவர்கள் அதிகமான பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் ஈர்க்க முயற்சிக்கின்றனர்.
Follow us on : click here