சிங்கப்பூரில் திரும்ப பெறப்பட்ட கருவிகள்!

சிங்கப்பூரில் Tracetogether கருவிகள் திருப்பி கொடுக்கப்பட்டதாக தகவல், தொடர்பு அமைச்சர் Josephine Teo தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 600,000 கருவிகள் திரும்பப் பெற பட்டதாக கூறினார்.

மார்ச் 12-ஆம் தேதியுடன் அவற்றைத் திருப்பி கொடுக்கும் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

அவைகள் எதிர்காலத்தில் தொடர்பு தடங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

இதனை Teo தனது Linkedin பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

2.6 மில்லியனுக்கும் அதிகமான Tracetogether கருவிகள் 2021-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வழங்கப்பட்டதாக அறிவார்ந்த தேச,மின்னிலக்க அரசாங்க குழுமம் தெரிவித்தது.

சென்ற மாதம் இந்த கருவிகள் தேவைபடாது என்று அரசாங்கம் தெரிவித்து இருந்தது.இவைகள் மறுபயனீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என குழுமம் குறிப்பிட்டது.