தேசிய பாப்கார்ன் தினம் ஆண்டுதோறும் ஜனவரி,19-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. பாப்கார்ன் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதில் சோளம்,உப்பு, வெண்ணெய்,கேரமல் தூறல் சேர்ந்த விரும்பத்தக்க சிற்றுண்டி.பூர்விக அமெரிக்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாப்கார்னை உட்கொண்டு பயன்படுத்தி இருந்ததாகவும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
ஹாலோவீனில் பாப்கார்ன் பந்துகள், கிறிஸ்துமஸ் பாப்கார்ன் சரங்கள் மற்றும் திரையரங்குகளிலும் ஆண்டு முழுவதும் சுவையான கேரமல் வெண்ணெய் பாப்கார்ன்!உணவுகளில் சோளம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டு இருக்கிறது. இன்று தேசிய பாப்கார்ன் நாளில்,“இந்த சோளங்கள் பாப் செய்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் நல்ல சுவையுடனும் நிரப்பட்டும்!´´