Singapore news

இன்று பக்ரீத் தினம்!

ஈத்-உல்-அதா 2023 : இன்று “தியாகத்தின் பண்டிகை´´ என்றழைக்கப்படும் “பக்ரீத் பண்டிகை´´ கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இன்று உலக முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள்.

இஸ்லாமிய மாதமான துல்-ஹிஜ்ஜாவின் 10-ஆவது நாளில் ஈத்-உல்-அதா வருகிறது.இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் இறுதி மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஈத்-உல்-அதாவின் தேதி மாறுபடும். அது சந்திரனைப் பார்ப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

இது பிராத்தனை மைதானங்களில் அல்லது மசூதிகளில் கூட்டமாக செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் தங்கள் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஒன்று கூடி வருவார்கள்.அது பிரார்த்தனை,தியாகம், நம்பிக்கை மற்றும் கடவுளுக்கு கீழ்ப்படிதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

அனைவருக்கும் “SG TAMILAN´´ இணைய பக்கம் சார்பாக EID MUBARAK வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.