இன்று(ஆகஸ்ட் 31) இரவு சிங்கப்பூரில் ப்ளூ மூன் காட்சியை வானில் காணலாம்.
இவ்வாண்டு பூமிக்கு மிக அருகில் உள்ள ப்ளூ மூன் சூப்பர் மூனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிவியல் மைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ப்ளூ மூன் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சூப்பர் மூன் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு மிக அருகில் நிலாவின் சுற்றுப்பாதை இருக்கும் போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாகாவும், பிரகாசமாகவும் காட்சி அளிக்கும்.இத்தகைய அறிய நிகழ்வை சூப்பர் மூன் என்றழைப்பர்.
இரவு 7.34 மணிக்கு ப்ளூ மூன் கிழக்கிலிருந்து உதயமாகும் என்று கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் ப்ளூ மூனை பார்க்க சரியான நேரம் ஆகஸ்ட் 31(இன்று) இரவு 9 மணி முதல் காணலாம் என்று மையம் தெரிவித்துள்ளது.