இரயிலில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு…!!!

இரயிலில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கிழக்கு-மேற்கு இரயில்வேயில் ஜூரோங் ஈஸ்ட் ஸ்டேஷன் மற்றும் புவன விஸ்தா ஸ்டேஷன் இடையே நாளை (செப்டம்பர் 30) ​​ரயில் சேவைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளமென்டி ஸ்டேஷன் முதல் உலு பாண்டன் டிப்போ வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்ததில் 12 புதிய விரிசல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய விரிசல்கள் சரி செய்யப்பட்டவுடன் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 1முதல் ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ரயில் சேவை பாதிக்கப்பட்ட போது, ​​செப்டம்பர் 30ம் தேதிக்குள் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் தடத்தில் புதிய விரிசல்கள் கண்டறியப்பட்ட காரணத்தினால் விரிசல்கள் சரி செய்யப்பட கால அவகாசம் தேவைப்படும் என்று கூறியது.

SMRT மற்றும் தரைவழி போக்குவரத்து ஆணையம், தண்டவாளத்தின் சில பகுதிகளை வலுவிழக்கச் செய்த பழுதடைந்த ரயில் காரணமாக விரிசல் ஏற்பட்டதாகக் கூறியது.

10 ரயில் பிரிவுகள் இன்று மாற்றப்படும். அதன் பிறகு நாளை அதில் சோதனை நடத்தப்படும் என்று கூறியது.

பூன் லே மற்றும் குவீன்ஸ்டவுன் MRT நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து சேவைகளையும், ஜூரோங் ஈஸ்ட் மற்றும் புவன விஸ்தா இடையே இலவச பேருந்து சேவைகளையும் மக்கள் பயன்படுத்தலாம்.

புவன விஸ்தா மற்றும் குவீன்ஸ்டவுன் நிலையங்களுக்கும் ஜூரோங் ஈஸ்ட் மற்றும் பூன் லே நிலையங்களுக்கும் இடையே ஷட்டில் ரயில் சேவைகள் வழங்கப்படும்.