பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!!

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட...!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க...!!!

பெண்கள் என்றாலே அழகுதான்… அதிலும் நீண்ட தலை முடி கொண்ட பெண்கள் பார்ப்பதற்கு வசீகரத் தோற்றத்துடன் இருப்பர். இப்படியான நீண்ட கூந்தலை பராமரிப்பதற்கு சிலர் அதிகம் மெனக்கெடுவார்கள். நீண்ட கூந்தல் இருப்பவர்கள் சிலருக்கு பேன் தொல்லை பொடுகு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இப்படி தலையில் அதிகமான பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம்.

பொடுகுக்கான காரணங்கள்:

🧏‍♀️ சரியான பராமரிப்பு இல்லாதது

🧏‍♀️ காலநிலை மாற்றம்

🧏‍♀️ அதிக வியர்வை

🧏‍♀️ மனச்சோர்வு

பொடுகின் விளைவுகள்:

💁‍♀️ தலையில் அரிப்பு

💁‍♀️ துர்நாற்றம்

💁‍♀️ முடி உதிர்தல்

💁‍♀️ தலையில் புண்கள்

💁‍♀️ உச்சந்தலையில் எரிச்சல் உணர்வு

தேவையான பொருட்கள்:-

1) கொய்யா இலை – பத்து

2) துளசி இலை – ஒரு கைப்பிடி

3)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

👉 முதலில் கொய்யா இலைகள் மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும்.

👉 அடுத்து இந்த இரண்டு இலைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைக்கவும்.

👉 இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு கடலை மாவுடன் கலந்து முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

👉 பின்னர் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1) வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

2) வேப்பிலை – ஒரு கைப்பிடி

3) கற்றாழை துண்டு – இரண்டு

4) பாசிப்பயறு – ஒரு

செய்முறை விளக்கம்:-

👉 ஒரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் பாசிப்பயறு போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

👉 பின்பு கற்றாழை துண்டுகளை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

👉 அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வேப்ப இலைகள், ஊறவைத்த வெந்தயம், பாசிப்பயறு மற்றும் கற்றாழை துண்டுகளை எடுத்துக்கொண்டு அதை விழுதாக அரைக்கவும்.

👉 பின்னர் இந்த பேஸ்ட்டை உங்கள் தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்கவும்.

👉 அதன் பிறகு, உங்கள் தலை முடியை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள்.

இந்த ஹேர் பேக் உங்கள் தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.