சிங்கப்பூருக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கு…..

சிங்கப்பூருக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கு.....

சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம்,அனைத்து வெளிநாட்டு பயணிகளும் விரைவில் தானியங்கி பாதைகளை பயன்படுத்த முடியும் என சமீபத்தில் அறிவித்திருந்தது.

தானியங்கி பாதைகளை பயன்படுத்த முடியாத சிங்கப்பூரர்களுக்கு ,குறிப்பாக சிறு குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Darly David கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (பிப்.26) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் உள்துறை துணையமைச்சர் Muhhammad Faishal Ibrahim கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பயணிகளுக்கும் தானியங்கி பாதைகள் திறக்கப்படும் என்றாலும், அவற்றில் சில சிங்கப்பூரர்களுக்கும்,நிரந்தரவாசிகளுக்கும் ஒதுக்கப்படும் என்றார்.

சாங்கி விமான நிலையத்தில் குடும்பங்கள் மற்றும் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் தானியங்கி பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , அவை டெர்மினல் 2 இல் நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.

இத்தகைய உதவிப்பாதைகள் 2022- ஆம் ஆண்டு இறுதியிலிருந்து நடைமுறையில் இருப்பதாக கூறினார்.

மேலும் தானியங்கி பாதைகள் தேவைக்கேற்ப ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.