ஒரே நாளில் பிடிபட்ட மூன்று கடத்தல்காரர்கள்? மூளைய எப்படி எல்லாம் யோசிக்கிறானுங்க!!

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற மூன்று கடத்தல்காரர்கள் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

இந்த தகவலை நவம்பர் 16-ஆம் தேதியன்று பதிவிட்டது.

அவர்கள் உட்லண்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் திட்டத்தை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் முறியடித்தது.

சுமார் 1000 சிகரெட் பாக்கெட்டுகளை செப்டம்பர் 28-ஆம் தேதி பறிமுதல் செய்தது.

வழக்கமான சோதனை நடவடிக்கை,மூன்று மோட்டார் பைக்குகளில் சோதனை நடத்தியபோது மோட்டர் பைக்குகளின் ஸ்கேன்களில் முரண்பாடுகள் தென்பட்டது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை தீவிர படுத்தியது. மோட்டார் பைக்குகளின் பல்வேறு பகுதிகளில் சிகரெட் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று மோட்டார் பைக்குகளில் முதல் பைக்கில் 220 சிகரெட்டுகளும், இரண்டாவது பைக்கில் 380 சிகரெட்டுகளும்,மூன்றாவது பைக்கில் 400 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களான கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

அவர்களில் மூன்றாவது பைக் ஓட்டுநர் அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை ICA அதிகாரிகள் துரத்தி சென்று பிடித்தது.

அந்த மூன்று கடத்தல்காரர்களை மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஒரே நாளில் இந்த மூன்று கடத்தல்காரர்கள் பிடிபட்டதோடு, மூன்று கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குவது, விநியோகம் செய்வது,டெலிவரி செய்வது, அனுப்புவது, சேமித்து வைப்பது அல்லது கையாளுவது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியை விட 40 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.