தீ விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிகழ்வு!!வெளிச்சத்துக்கு வந்த காரணம்!!

கடந்த ஆண்டு Bedok North-ல் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Ithnin என்பவர் பற்றவைத்த சிகரெட்டை அணைக்காததே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் மூன்று வயது பெண் குழந்தையும், 35 வயதான அவளது தந்தையும் தீ விபத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் 56 வயதான Ithnin-ன் மனைவி Chan, கடுமையான தீக்காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தீ விபத்து எதிர்பாராமல் நடந்தது என்றும், இச்சம்பவத்தால் Ithnin மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மீது சிகரெட் சாம்பல் விழுந்திருக்கக்கூடும் என்றும், அதனால் வீடு தீப்பற்றி இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் காலை 5.20 மணியளவில் Ithnin சிகரெட்டை பற்றவைத்து அட்டைப்பெட்டியின் மீது வைத்ததை மறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

சுமார் 5.45 மணியளவில் அவருக்கு சிகரெட்டை பற்றவைத்தது நினைவுக்கு வந்தது. உடனே அவர் தனது மனைவி Chan-க்கு Whatsapp மூலம் தகவல் அளித்தார்.

ஆனால் அதற்குள் அனைத்தும் எரிந்து முடிந்திருக்கும் என்று அதிகாரி கூறினார்.

மேலும் உயிரிழந்தவர்களின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார்.